தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த 26 வயது விமானி ஒருவர், தான் வேலை செய்யும் விமான நிறுவனத்தின் அலுவல் தொடர்பாகச் சென்ற இடத்தில், சக சீனியர் விமானியால் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சிக்கப்பட்டதாகப் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, சீனியர் விமானி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
பெங்களூருவில் உள்ள அல்சூர் பகுதியில் அமைந்துள்ள தங்கும் விடுதி. அலுவல் தொடர்பாகச் சீனியர் விமானியுடன் பெங்களூருவில் தங்கியிருந்தபோது, சீனியர் விமானி தன்னைக் கட்டாயப்படுத்திப் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக அப்பெண் விமானி புகார் அளித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாகத் தப்பித்து ஐதராபாத் திரும்பியுள்ளார்.
ஐதராபாத்தில் உள்ள காவல் நிலையத்தில் சீனியர் விமானி மீது அப்பெண் விமானி பாலியல் பலாத்கார முயற்சிப் புகார் அளித்தார்.
எனினும், சம்பவம் அல்சூர் பொலிஸ் நிலைய எல்லைக்குள் நடந்ததால், ஐதராபாத் பொலிஸார் அந்தப் புகாரை அல்சூர் பொலிஸாருக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பேரில், அல்சூர் பொலிஸார் சீனியர் விமானி மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.