பிரித்தானிய கணிதவியல் அறிஞர்கள் இரண்டு பேர் லொட்டரியில் உறுதியான வெற்றிக்கான ரகசியத்தை வெளியிட்டுள்ளனர்.
பிரித்தானியாவை சேர்ந்த கணிதவியலாளர்களான டாக்டர் டேவிட் ஸ்டீவர்ட்(Dr David Stewart) மற்றும் டாக்டர் டேவிட் குஷிங்(Dr David Cushing) குறைந்த லொட்டரி டிக்கெட்டில் உறுதியான வெற்றியை பெறுவது குறித்து ஆய்வு செய்து வந்தனர்.
அதன்படி, பிரித்தானியாவின் நேஷனல் லொட்டரியில் உள்ள 45 மில்லியன் வாய்ப்புகளில் வெறும் 27 டிக்கெட்களில் வெற்றி உறுதி செய்வது எப்படி என்பதை கண்டறிந்துள்ளனர்.
மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த இரண்டு கணிதவியலாளர்களும், இந்த முறையின் மூலம் ஜாக்பாட் வெற்றிக்கு உறுதியளிக்கவில்லை.
ஆனால் நிச்சயமான ஏதோ ஒரு குறைந்தப்பட்ச வெற்றிக்கு உறுதியளிக்கின்றனர். பிரித்தானிய நேஷனல் லொட்டரி டிராவில், 1 முதல் 59 வரையிலான எண்களை கொண்ட 6 பந்துகள் மாற்றப்படாமல் எடுக்கப்படுகிறது.
இதில் குறைந்தபட்சம் 2 பந்துகள் பொருந்தும் போட்டியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.
வெற்றிக்காண உகந்த 27 டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை நாங்கள் தீர்மானிக்கிறோம், ஆனால் 26 டிக்கெட்டுகளுடன் வெற்றியை உத்தரவாதம் செய்வது சாத்தியமில்லை என்று கணிதவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எண் கலவைகளை அடையாளம் காண கணிதவியலாளர்கள் வரையறுக்கப்பட்ட வடிவியல் கணித அணுகுமுறையை பயன்படுத்துகின்றன.
இதற்காக 1 முதல் 59 வரையிலான எண்களை ஜோடிகளாக அல்லது மும்மடங்காக பல்வேறு வடிவங்களில் வரிசைப்படுத்துகின்றனர்.
இவ்வாறு ஒவ்வொரு எண்ணின் தொகுப்பும் கோடுகளுடன் இணைக்கப்பட்டு, 6 எண்களின் வரிசையை உருவாக்குகிறது. இவை லொட்டரி சீட்டு எண்ணுடன் ஒத்திருக்கிறது.