அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு சொந்தமான புளோரிடா மாகாணத்தில் உள்ள மார்-ஏ-லகோ என்ற பங்களாவில் கடந்த 8-ந் தேதி எப்.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
கடந்த அதிபர் தேர்தலில் தோற்ற டிரம்ப், வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறியபோது ரகசிய ஆவணங்களை பெட்டியில் வைத்து எடுத்து சென்றதாகவும், அந்த ஆணங்களை இந்த பங்களாவில் வைத்து இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
ரகசிய ஆவணங்களை கண்டுபிடிப்பதற்காக டிரம்பின் பங்களாவில் சோதனை நடத்தப்பட்டது. இச் சோதனைக்கு டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்தார். அதேவேளையில் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் டிரம்ப்பின் பங்களாவில் இருந்து ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக எப்.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, சோதனையில் அணு ஆயுதங்கள் தொடர்பான ரகசிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக வாஷிங்டன் போஸ்ட் ஊடகம் தெரிவித்துள்ளது.
#world