உலகம்செய்திகள்

பாடசாலையில் துப்பாக்கிச் சூடு!

download 22 1 1
Share

செர்பியாவின் தலைநகர் Belgrade-இல் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 8 சிறுவர்களும் காவலாளி ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 6 மாணவர்களும் ஆசிரியர் ஒருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Belgrade-இல் உள்ள  Vladislav Ribnikar எனும் குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் 14 வயது மாணவர் ஒருவர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டமைக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த மாணவர் தனது தந்தையின் துப்பாக்கியை பயன்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.

செர்பியாவில் இவ்வாறான துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளமை இதுவே முதல் தடவை என அந்நாட்டின் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்ட பின்னர், குறித்த மாணவர் தாமாகவே பொலிஸாருக்கு அழைப்பு மேற்கொண்டு, தகவல் தெரிவித்ததாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த தாக்குதலுக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

எவ்வாறாயினும், துப்பாக்கிச்சூடு நடத்திய மாணவர் ஒரு மாதத்திற்கு முன்பே தாக்குதலைத் திட்டமிட்டுள்ளதாகவும், அவர் இலக்கு வைக்கும் சிறுவர்களின் “பட்டியலை” எடுத்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் 2009 இல் பிறந்தவர்கள் – அதாவது சம்பவத்தின் போது அவர்களுக்கு 13 அல்லது 14 வயது இருக்கும் என பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், செர்பியாவில் மூன்று நாட்களுக்கு துக்கம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...