10 2 scaled
உலகம்செய்திகள்

பாடசாலையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி குடியிருப்பில் சடலமாக மீட்பு: பிரித்தானியாவில் சம்பவம்

Share

பாடசாலையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி குடியிருப்பில் சடலமாக மீட்பு: பிரித்தானியாவில் சம்பவம்

பிரித்தானியாவில், பாடசாலையில் விளையாடிவிட்டு குடியிருப்புக்கு திரும்பிய 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சிறுமி தொடர்பில் கைதான பெண்மணி உள்ளிட்ட முக்கிய தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Rowley Regis பகுதியில் உள்ள குடியிருப்பில் இருந்து 10 வயதேயான Shay Kang நேற்று குற்றுயிராக மீட்கப்பட்டார்.

மருத்துவ உதவிக் குழுவினர் தங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளும் முன்னெடுத்த நிலையிலும், சிறுமியை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது. இந்த நிலையில் சிறுமிக்கு நன்கு அறிமுகமான 33 வயது பெண் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசார் கைது செய்துள்ளனர்.

சிறுமி Shay Kang குடியிருப்புக்கு அருகாமையில் உள்ள பிரிக்ஹவுஸ் ஆரம்ப பள்ளியில் பயின்று வந்துள்ளார். இன்று சிறுமியின் புகைப்படத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

மேலும், சிறுமிக்கு என்ன நேர்ந்தது என்பது தொடர்பில் விரிவான விசாரணை முன்னெடுக்கப்படும் என்று பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமி தொடர்பில் அப்பகுதி மக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Share
தொடர்புடையது
Untitled 92
செய்திகள்உலகம்

‘அவரை மீட்டுவிட்டோம்’: ஈரானில் அமெரிக்க விமானி அதிரடி மீட்பு!

ஈரானிய வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்திலிருந்து குதித்து மாயமாகியிருந்த விமானி, ஒரு துணிச்சலான...

Untitled 91
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி: புதிய உரம் ஒதுக்கீட்டு முறை அறிமுகம்!

இலங்கை சந்தையில் உரத்தின் விலையினைக் கட்டுப்படுத்தி, விவசாயிகளுக்கு நியாயமான விலையில் தட்டுப்பாடின்றி உரம் கிடைப்பதை உறுதி...

Untitled 90
செய்திகள்உலகம்

புஷெர் அணுமின் நிலையம் மீது தாக்குதல்: கதிர்வீச்சு அபாயம் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே போர் தீவிரமடைந்து வரும்...

Untitled 89
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கியூ.ஆர். பணப்பரிமாற்றத்திற்கு இனி கட்டணமில்லை: நாளை முதல் அதிரடி மாற்றம்!

இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், லங்கா கியூ.ஆர் (LankaQR) மூலமான பணப்பரிமாற்றங்களுக்கு நாளை (ஏப்ரல்...