டசின் கணக்கானோர்… பாடசாலை கட்டிட விபத்தில் உறுதி செய்த அதிகாரிகள்

7 3

இடிந்து விழுந்த இந்தோனேசிய பள்ளியின் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிய 91 மாணவர்களில் எவரும் உயிருடன் இல்லை என்றே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திங்கட்கிழமை சிடோர்ஜோ நகரில் உள்ள இரண்டு மாடி உண்டு உறைவிடப் பள்ளி இடிந்து விழுந்தபோது நூற்றுக்கணக்கான மாணவர்கள், அவர்களில் பெரும்பாலோர் இளம் வயதினர் உள்ளே சிக்கிக்கொண்டனர்.

அந்த விபத்தில் குறைந்தது ஐந்து மாணவர்கள் இறந்ததாகவும், சுமார் 100 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில், மீட்புப் பணிகள் தொடங்கியதிலிருந்து 13 மாணவர்கள் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டனர், இருப்பினும் இருவர் பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

தற்போது, வியாழக்கிழமை, பேரிடர் தணிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், வெப்ப ட்ரோன்களைப் பயன்படுத்தியுள்ள மீட்புப் பணியாளர்கள், இடிபாடுகளில் இருந்து உயிருடன் இருப்பதற்கான அறிகுறிகளைக் கண்டறியத் தவறிவிட்டதாகக் கூறியுள்ளனர்.

இதனையடுத்து, இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிய 91 மாணவர்களில் எவரும் உயிருடன் இல்லை என்றே அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். விஞ்ஞான ரீதியாக எவரும் உயிருடன் இல்லை என்பதை உறுதி செய்ததன் பின்னர், கனரக கருவிகளைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

ஆனால், இடிபாடுகளுக்கு அடியில் இருந்து இன்னும் அழுகை மற்றும் அலறல் சத்தம் கேட்கிறது என்று அதிகாரிகள் புதன்கிழமை கூறியிருந்தனர்.

பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பல பாடசாலை வளாகத்தில் காத்திருக்கின்றனர், அவர்களில் பலர் தங்கள் அன்புக்குரியவர்கள் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையுடன் உள்ளனர்.

 

Exit mobile version