உலகம்செய்திகள்

தானியங்கி மருந்து விநியோக இயந்திரத்தை அறிமுகம் செய்த சவூதி

rtjy 13 scaled
Share

தானியங்கி மருந்து விநியோக இயந்திரத்தை அறிமுகம் செய்த சவூதி

மருந்துகளை விநியோகிக்க உலகின் முதல் தானியங்கி இயந்திரத்தை வெற்றிகரமாக சவூதி அரேபியா அறிமுகம் செய்துள்ளது.

சவூதி அரேபியாவின் வடமேற்கு பிராந்தியத்தில் உள்ள ”மன்னர் சல்மான் இராணுவ மருத்துவமனையை”பிரதிநிதித்துவப்படுத்தும் பாதுகாப்பு அமைச்சகத்தின் சுகாதார சேவைகளுக்கான பொது இயக்குநரகம் வெற்றிகரமாக தானியங்கி மருந்து விநியோக இயந்திரத்தை உருவாக்கியுள்ளது.

குறித்த இயந்திரம் மருந்துகளில் பரிந்துரைக்கப்பட்ட பார்கோட் (Barcode), பயனாளிகள் பயன்படுத்துவதற்கான தொடர்புத் திரை, ரோபோக்களை பயன்படுத்திய ஒரு சிறப்பு இயக்க முறைமை மற்றும் மருந்துச் சீட்டின் தயார்நிலையைப் பயனாளிக்குத் தெரிவிப்பதற்கான செய்தி தளம் போன்றவற்றை கையாளும் பணி அமைப்புகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

24 மணிநேர சேவையை வழங்கும் இந்த இயந்திரம் 102–700 மருந்து வகைகளை சேமிக்கும் திறனை கொண்டமைக்கப்பட்டுள்ளது.

பயனாளிகளுக்கு குறிப்பிட்ட மருந்துகளை தினசரி, மாதாந்தம் அல்லது வருடாந்த அடிப்படையில் எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பான தகவல்களையும் இவ்வியந்திரம் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...