MediaFile 1 2
உலகம்செய்திகள்

ஜப்பானின் புதிய பிரதமராகத் தேர்வு: அந்நாட்டின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமை!

Share

ஜப்பானில் ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி (LDP) பெரும்பான்மையை இழந்ததைத் தொடர்ந்து, பிரதமர் ஷிகெரு இஷிபா சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அதனைத் தொடர்ந்து, அக்கட்சியின் புதிய தலைவராக அமைச்சர் சானே டகாய்ச்சி (64) தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் வெற்றியின் தொடர்ச்சியாக லிபரல் ஜனநாயகக் கட்சியின் அதிகாரப்பூர்வ தலைவராகப் பதவியேற்றார்.

இதையடுத்து, அவர் பிரதமராகத் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது, அதன்படி சானே டகாய்ச்சி பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஜப்பான் பாராளுமன்றில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், கீழவையில் மொத்தம் உள்ள 465 வாக்குகளில் 237 வாக்குகளைப் பெற்று டகாய்ச்சி வெற்றி பெற்றார். மேலவையில் நடத்தப்படும் வாக்கெடுப்பிலும் அவர் வெற்றி பெறும் வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதால், அவர் ஜப்பானின் புதிய பிரதமராக ஏற்றுக்கொள்ளப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில், அவர் ஜப்பான் நாட்டின் 104வது பிரதமராகப் பதவி ஏற்க உள்ளார்.

இதன் மூலம், சானே டகாய்ச்சி, ஜப்பான் அரசியல் வரலாற்றில் பதவியேற்க உள்ள முதல் பெண் பிரதமர் என்ற பெயரையும், பெருமையையும் பெறுகிறார். ஜப்பானின் “இரும்புப் பெண்மணி” என்று அழைக்கப்படும் டகாய்ச்சி, மறைந்த பிரித்தானியப் பிரதமர் மார்கரெட் தாட்சரின் அரசியல் ரசிகையாகக் கருதப்படுகிறார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...