தமிழ் முறைப்படி ஓரின சேர்க்கை திருமணம்

கனடாவில் தமிழ் பாரம்பரிய முறைப்படி ஓரின சேர்க்கையாளர்களான இரு பெண்களின் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்தத் திருமணம் கனடாவில் Grafton பகுதியில் நேற்றுமுன்தினம் 26 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

இரண்டு பெண்களும் தமது உறவினர்கள் முன்னிலையில் அம்மி மிதித்து அருந்ததி பார்த்து தாலி கட்டிக்கொண்டுள்ளனர்.

இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வைரலாகி வருகின்றன.

இந்தத் திருமணம் தமிழ் பாரம்பரியப்படி ஐயர் அழைக்கப்பட்டு மந்திரங்கள் சொல்லி நடத்தப்பட்டுள்ளது.

இந்தியா உட்பட பல நாடுகளில் ஒரே பாலின திருமணங்கள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் ஒரே பாலின திருமணங்களில் தமிழர்களின் கலாசாரத்தில் இடம்பெற்ற திருமணம் இதுவே முதற்தடவையாகும்.

கனடாவில் ஓரின சேர்க்கை திருமணம் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தத் திருமணம் உற்றார் உறவினர்களின் ஆசீர்வாதத்துடன் சிறப்பாக நடைபெற்றுள்ளமை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

wed

 

Exit mobile version