உலகம்செய்திகள்

பிரித்தானியக் கடற்பகுதியில் ரஷ்ய உளவுக் கப்பல்: புடினுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Share
15 30
Share

பிரித்தானியக் கடற்பகுதியில் ரஷ்ய உளவுக் கப்பல்: புடினுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இந்த வார தொடக்கத்தில் பிரித்தானியாவின் கடல் பகுதியில் ரஷ்ய உளவு கப்பல் ஒன்று காணப்பட்டதை அடுத்து, ராயல் கடற்படை அதை கண்காணித்து வருகிறது என பாதுகாப்பு செயலர் கூறியுள்ளார்.

ஜான் ஹீலி கூறுகையில், யந்தர் என்ற அந்தக் கப்பல், உளவுத்துறை தகவல்களைச் சேகரிப்பதற்கும், பிரித்தானியாவின் முக்கியமான நீருக்கடியில் உள்கட்டமைப்பை கண்காணிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் வளர்ந்து வரும் ரஷ்ய அத்துமீறலுக்கு மற்றொரு எடுத்துக்காட்டு என்று அவர் தெரிவித்துள்ளார். ஜான் ஹீலி மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் உங்களைப் பார்த்துவிட்டோம், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும், இந்த நாட்டைப் பாதுகாக்க வலுவான நடவடிக்கை எடுக்க நாங்கள் தயங்க மாட்டோம் என்பதை ஜனாதிபதி புடின் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யா யந்தரை ஒரு கடல்சார் ஆராய்ச்சிக் கப்பல் என்றும், இது நாட்டின் பாதுகாப்பு அமைச்சகத்தால் இயக்கப்படுவதாகவும் விளக்கமளித்துள்ளது. மேற்கத்திய நாடுகள் பெரும்பாலும் ஐரோப்பிய கடல் பகுதியில் இயங்கும் கப்பலைக் கண்காணித்து வருகின்றன, மேலும் கடலுக்கடியில் உள்ள கேபிள்களை உளவு பார்ப்பது அதன் பணியின் ஒரு பகுதியாக இருந்திருக்கலாம் என்று அவர்கள் சந்தேகிக்கின்றனர்.

மட்டுமின்றி, உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து ரஷ்யா இந்த நடவடிக்கையை முடுக்கிவிட்டதாகவும் அவர்கள் நம்புகிறார்கள். ராயல் கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று யந்தருக்கு அருகில் கண்காணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்றே ஹீலி தெரிவித்துள்ளார்.

மேலும், ரஷ்ய கடற்படை நடவடிக்கைகளுக்கு நேட்டோ நட்பு நாடுகளுடன் இணைந்து அரசாங்கம் தனது பதிலை வலுப்படுத்தி வருவதாக ஹீலி தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...