8 scaled
உலகம்செய்திகள்

வாக்னர் கூலிப்படையை பயங்கரவாத குழுவாக அறிவிக்கவிருக்கும் பிரித்தானியா

Share

வாக்னர் கூலிப்படையை பயங்கரவாத குழுவாக அறிவிக்கவிருக்கும் பிரித்தானியா

ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படையை தடைசெய்யப்பட்ட பயங்கரவாதக் குழுவாக அறிவிக்க பிரித்தானியா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் அந்த அமைப்பில் உறுப்பினராக இருப்பது அல்லது ஆதரவளிப்பது என்பது சட்டவிரோதமானது என கூறப்படுகிறது. வாக்னர் கூலிப்படையின் சொத்துக்களை பயங்கரவாத அமைப்பின் சொத்து என வகைப்படுத்தி பறிமுதல் செய்ய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் வரைவு உத்தரவு அனுமதிக்கும் என்றும் கூறுகின்றனர்.

வாக்னர் கூலிப்படையை வன்முறையை தூண்டும் அழிவுகரமான அமைப்பு என குறிப்பிட்டுள்ள உள்விவகார செயலர் சுயெல்லா பிரேவர்மேன், ரஷ்யாவின் வெறும் ஒரு ராணுவ கருவி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைனிலும் ஆப்பிரிக்காவிலும் அதன் செயற்பாடுகள் உலகளாவிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனவும் சுயெல்லா பிரேவர்மேன் குறிப்பிட்டுள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பில் வாக்னர் கூலிப்படை முக்கிய பங்கு வகித்துள்ளது.

அத்துடன் சிரியா, லிபியா, மாலி உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் செயல்பட்டு வருகிறது. வாக்னர் கூலிப்படையினர் மீது உக்ரேனிய குடிமக்களைக் கொல்வது மற்றும் சித்திரவதை செய்தல் உட்பட பல குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தற்போது ஹமாஸ் மற்றும் போகோ ஹராம் போன்ற அமைப்புகள் போன்று, பிரித்தானியாவில் தடைசெய்யப்பட்ட குழுக்களின் பட்டியலில் வாக்னர் கூலிப்படையும் இணைக்கப்படும்.

இதனால் வாக்னர் கூலிப்படையில் இனி உறுப்பினராக இருப்பது அல்லது ஆதரவளிப்பது என்பது சட்டவிரோதமாகும். மீறுபவர்களுக்கு 14 ஆண்டுகள் வரையில் சிறை தனடனை அல்லது 5,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்படும்.

Share
தொடர்புடையது
world 22
செய்திகள்உலகம்

ஈரான் விவகாரத்தில் டிரம்பின் தற்காலிகப் போர்நிறுத்தத்தின் பின்னணி!

வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், அதிபர் டொனால்ட் டிரம்ப் கடைபிடிக்கும் அணுகுமுறையை அரசியல்...

world 21
செய்திகள்உலகம்

மறைந்த தனது மனைவிக்காக நிலவில் பெயர் சூட்டிய விண்வெளி வீரர்!

சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவை நோக்கிப் பயணித்துள்ள நாசாவின் ‘ஆர்டெமிஸ் II’ விண்கலக் குழுவினர்,...

world 20
செய்திகள்உலகம்

இரு வார காலப் போர்நிறுத்தம்: ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறக்கத் தெஹ்ரான் சம்மதம்!

ஈரானின் உள்கட்டமைப்புகள் மீது பாரிய தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்திருந்த...

Untitled 102
செய்திகள்இலங்கை

ரூபவாஹினி கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் விளக்கமறியலில்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்ட, இலங்கை ரூபவாஹினி...