உலகம்செய்திகள்

கனடாவில் முக்கிய நகரத்தில் மூடப்படும் வீதிகள்

Share
1 31
Share

கனடாவில் முக்கிய நகரத்தில் மூடப்படும் வீதிகள்

எதிர்வரும் புத்தாண்டை முன்னிட்டு கனடாவின் (Canada) ரெறான்ரோ நகரின் சில முக்கிய வீதிகள் மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களை மேற்கொள்ளவும் பாதுகாப்பாக வீடு திரும்பவும் இவ்வாறு சில நடவடிக்கைகள் எடுப்பதாக ரொறன்ரோ நகர நிர்வாகம் அறிவித்துள்ளது.

நாளை செவ்வாய்க்கிழமை இரவு 10 மணி முதல் புதன்கிழமை அதிகாலை ஒரு மணி வரையில் ரொறன்ரோவின் சில வீதிகள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டவுன்ரவுன் கோர், குயின்ஸ் குயே வெஸ்ட், பே ஸ்ட்ரீட், யோர்க் வீதி உள்ளிட்ட சில வீதிகள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நகரின் சில இடங்களில் வாண வேடிக்கை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனவே பொதுப் போக்குவரத்து தொடர்பிலும் இவ்வாறு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டை முன்னிட்டு ரொறன்ரோவில் பல்வேறு கொண்டாட்ட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...