கனடாவில் அதிகரிக்கும் உயிரிழப்புகள் : வெளியான காரணம்

24 6674b05a65690

கனடாவில் அதிகரிக்கும் உயிரிழப்புகள் : வெளியான காரணம்

கனடாவில்(Canada) உச்சம் தொட்டுள்ள வெப்பம் காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதன் காரணமாக 65 வயதுக்கும் மேற்பட்ட முதிர்ந்தவர்களே அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும், மரணிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் கனடாவில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட 12 நகரங்களில் வெப்பம் அதிகமாக நிலவி வருவதால் மரணங்கள் பதிவாவதாக கூறப்படுகின்றது.

மேலும், வீடுகள் அதிகளவில் வாடகைக்கு விடப்படும் நகரங்களில் வெப்பம் காரணமாக மரணங்கள் கூடுதலாக பதிவாகின்றது என சுட்டிக்காட்டப்படுகின்றது.

வெப்பநிலை கூடுதலான நாட்களில், ரொறன்ரோ மற்றும் மொன்றியலில் சுவாச உபாதைகளினால் முதியவர்கள் அதிகளவில் உயிரிழப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வான்கூவார், பிரிட்டிஸ் கொலம்பியா, சர்ரே போன்ற இடங்களில் அதிக வெப்பநிலைக்கு பழக்கப்படாதவர்கள் வெப்ப நிலை அதிகரிப்பினால் பாதிக்கப்படுவதாகத் குறிப்பிடப்படுகின்றது.

 

Exit mobile version