பிரான்சில் தொடங்கிய பழிவாங்கும் அரசியல்
பிரான்ஸ்(France) நாடாளுமன்றத் தேர்தலில் வலதுசாரிக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றாமல் இருக்க பல கட்சிகள் எதிரணியில் நின்று பாடுபட்டு, அக்கட்சியை ஆட்சிக்கு வரவிடாமல் தடுத்த நிலையில் அக்கட்சிக்கு மூன்றாம் நிலையே கிடைத்தது.
இந்நிலையில், வலதுசாரிக் கட்சியின் தலைவரான மரைன் லு பென்னை (Marine Le Pen) சிறைக்கு அனுப்ப முயற்சிகள் நடந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் மீதான பழைய வழக்கொன்றைக் கிளறி, பொலிஸார் வலதுசாரிக் கட்சி மீதும், அக்கட்சியின் தலைவரான மரைன் லு பென் மீதும் மோசடி வழக்கு விசாரணை ஒன்றைத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
2022ஆம் ஆண்டு, மோசடி செய்து ஜனாதிபதியாக முயற்சி செய்ததாக அவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந் நிலையில் தேர்தல் பிரசாரம் மற்றும் கட்சி செலவுக்காக, National Rally கட்சி, மக்கள் வரிப்பணத்தை திருடியதாக ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது.
குறித்த வழக்கு, வரும் செப்டம்பர் மாதம் பாரீஸில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மரைன் லு பென் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் நிலையில், அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும் என்பதுடன், அவர் தேர்தலில் போட்டியிடவும் தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.