அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள மியாமி கடல் பகுதியில் அகதிகளை சட்டவிரோதமாக ஏற்றி வந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
நேற்றையதினம் அப்பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட அமெரிக்க கடலோரக் காவல்படையினர் குறித்த பகுதியில் படகு ஒன்று கவிழ்ந்து கிடைப்பதனை கண்டுள்ளனர்.
உடனடியாக படகின் அருகில் சென்று பார்த்தபோது படகின் மேல் பகுதியில் ஒருவர் அமர்ந்து கொண்டு உயிருக்குப் போராடுவதைப் பார்த்து கடலோர பாதுகாப்பு படை வீரர்கள் அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த விபத்து தொடர்பாக அவரிடம் நடத்திய விசாரணையில் சனிக்கிழமை இரவு சுமார் 40 பேருடன் அகதிகளை ஏற்றி வந்த படகு மோசமான வானிலை காரணமாக விபத்துக்குள்ளானமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில் படகு கவிழ்ந்த பகுதியில் ஒருவரின் சடலத்தை மீட்டு இருப்பதாக கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
காணாமல் போன 38 தேடி வருவதாகவும் படகிலிருந்து விழுந்தவர்கள் நீண்ட நேரம் தண்ணீரில் நீந்தியபடி உயிர் பிழைப்பதற்கான எந்த ஒரு வாய்ப்பும் இல்லை எனவும் மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
#World
Leave a comment