லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் கேட்ட சம்பளம்?
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படம் வருகிற டிசம்பர் மாதம் 8 -ம் தேதி வெளியாக இருக்கிறது.
இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஹீரோவாக நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.
கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட லால் சலாம் படத்தில் மொய்தீன் பாயாக ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். அதன் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ரஜினிகாந்த் லால் சலாம் படத்தில் நடிப்பதற்காக ரூ.40 கோடியை சம்பளமாக கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.