tamilni 333 scaled
உலகம்செய்திகள்

கன மழைக்கு மொத்தமாக மூழ்கிய விமான நிலையம்… பெருவெள்ளத்தில் தப்பிய முதலைகளால் பீதியில் மக்கள்

Share

கன மழைக்கு மொத்தமாக மூழ்கிய விமான நிலையம்… பெருவெள்ளத்தில் தப்பிய முதலைகளால் பீதியில் மக்கள்

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் வரலாறு காணாத பேய் மழையால் பெருவெள்ளம் எற்பட்டு இயல்பு நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய மக்கள் சிக்கித் தவிக்கின்றனர். வெப்பமண்டல சூறாவளியால் ஏற்பட்ட தீவிர வானிலை சில பகுதிகளில் ஒரு வருடத்தில் பெய்ய வேண்டிய மழையை சில நாட்களில் கொட்டித்தீர்த்துள்ளது.

இதனிடையே, கெய்ர்ன்ஸ் விமான நிலையம் பெருவெள்ளத்தில் மொத்தமாக மூழ்கியுள்ளதை அடுத்து விமானங்கள் நீரில் மூழ்கின. நகர மத்தியில் முதலை ஒன்று காணப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்கள் உயிர் பயத்தில், படகுகளில் வீடுகளை விட்டு வெளியேறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், இதுவரையில் உயிரிழப்பு அல்லது காணாமல் போனவர்கள் குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை என்றே கூறப்படுகிறது.

மட்டுமின்றி, இன்னும் 24 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நூற்றுக்கணக்கான மக்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், குடியிருப்புகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், மின்சாரம் மற்றும் சாலைகள் துண்டிக்கப்பட்டு, பாதுகாப்பான குடிநீர் அளவு குறைந்து வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, குயின்ஸ்லாந்து முதல்வர் ஸ்டீவன் மைல்ஸ் தெரிவிக்கையில், இதுபோன்ற மிக மோசமான இயற்கை பேரிடரை தாம் இதுவரை எதிர்கொண்டதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், திங்கட்கிழமை முழுவதும் மழை தொடரும் என்றும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செவ்வாய்கிழமையன்று மழை குறையத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், ஆறுகள் இன்னும் அதன் மொத்த கொள்ளளவை எட்டவில்லை என்றும், ஆனால் அடுத்த பல நாட்கள் நீர் வரத்து அதிகரித்தே காணப்படும் என தெரிவித்துள்ளனர்.

மாகாண நிர்வாகம் இதுவரையான சேத மதிப்பு 1 பில்லியன் அவுஸ்திரேலிய டொலர் என கணக்கிட்டுள்ளனர். பொதுவாக கிழக்கு அவுஸ்திரேலியா சமீபத்திய ஆண்டுகளில் அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. மட்டுமின்றி அவுஸ்திரேலியா தற்போது El Nino வானிலை நிகழ்வை எதிர்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
25 68f5c4968ea01
செய்திகள்இலங்கை

வெள்ள அபாய எச்சரிக்கை: பல வான்கதவுகள் திறப்பு!

மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயா படுகைப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையைக் கருத்தில்...

image 95f229676a
செய்திகள்உலகம்

கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு: அமெரிக்கப் படைகள் நீர்மூழ்கிக் கப்பலைத் தகர்த்தன!

லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து கரீபியன் கடல் வழியாக அமெரிக்காவிற்கு அதிவிரைவு படகுகள் மூலம் போதைப்...

1752485228 GovyPay 6
செய்திகள்இலங்கை

போக்குவரத்து அபராதங்களை GovPay மூலம் செலுத்தலாம்: இலங்கை பொலிஸ் அறிவிப்பு

இலங்கைப் பொலிஸ் இன்று (அக்டோபர் 20) அறிவித்துள்ளதன் படி, தென் மாகாணத்தில் உள்ள வாகன ஓட்டுநர்கள்,...

image 7efc8d34a7
செய்திகள்இலங்கை

வவுனியாவில் பாரிய போதைப்பொருள் கைப்பற்றல்: 3.59 லட்சம் மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

வவுனியாவில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில், மூன்று லட்சத்து 59 ஆயிரம் போதை மாத்திரைகளுடன்...