உலகம்செய்திகள்

அமெரிக்காவில் கத்திக்குத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலி

rtjy 27 scaled
Share

அமெரிக்காவில் கத்திக்குத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலி

அமெரிக்காவில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவில், குயின்ஸில் இந்த கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

தாக்குதலில் பலத்த காயமடைந்த மேலும், மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொல்லப்பட்டவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என அந்நாட்டு பாதுகாப்பு பிரிவு தகவல் வழங்கியுள்ளது.

சம்பவத்தில் 11 வயது சிறுமி, 12 வயது சிறுவன், 44 வயதுடைய பெண் மற்றும் 30 வயதுடைய ஆண் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கொலைச் சம்பவத்தின் முக்கிய சந்தேக நபரும் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...