ரஷ்ய ஜனாதிபதி புடினின் ஆடம்பர கவச ரயில்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் ஆடம்பர சொகுசு கவச ரயிலில் அமைந்துள்ள பிரம்மாண்ட வசதிகள் என்னென்ன என்பதை இந்த செய்தியில் பார்ப்போம்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனக்கென பிரத்யேகமாக வைத்துள்ள ஆடம்பர கவச ரயிலில் உள்ள சிறப்பம்சங்கள் அனைத்தும் சாதாரண மனிதர்கள் தங்கள் வாழ்நாள் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாததாக அமைந்துள்ளது.
சுமார் 3.75 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள இந்த ஆடம்பர கவச ரயிலில் 22 பெட்டிகள் அமைந்துள்ளது, ஒவ்வொரு பெட்டியிலும் ஜனாதிபதி புடினுக்கு என்று பிரத்யேகமான உணவகங்கள், அழகு நிலையங்கள் மற்றும் விளையாட்டு நிலையங்கள் போன்றவற்றை உள்ளடக்கி வைத்துள்ளன.
மேலும் இந்த ரயிலில், உடற்பயிற்சி கூடம், ஹைப்பர் எக்ஸ்டென்ஷன் இயந்திரம், தனி மருத்துவ தொகுப்பு, தனிப்பட்ட அழகு நிலையம், வயது தடுப்பு உபகரணங்கள், நுரையீரல் வென்டிலேட்டர்கள், இதய துடிப்பு மற்றும் வெப்பநிலை கண்காணிக்கும் சாதனங்கள் மற்றும் டிஃபிபிரிலேட்டர் ஆகியவற்றை உள்ளடக்கி வைத்துள்ளது.
மேலும் இந்த ரயிலில், ஆடம்பரமான நறுமண நுரை அமைப்பை கொண்ட குளியல் ஷவர் அம்சங்களையும் கொண்டுள்ளது.
யாராலும் கண்காணிக்க முடியாது
கடந்த 2021ம் ஆண்டு முதல் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்த ஆடம்பர கவச ரயில்-யை தன்னுடைய பயணங்களுக்கு அதிகமாக பயன்படுத்த தொடங்கியுள்ளார்.
உலக தலைவர்களின் விமானங்களை போல ரஷ்ய ஜனாதிபதி புடினின் இந்த ரயிலையும் யாராலும் கண்காணிக்க முடியாது.
Leave a comment