16 24
உலகம்செய்திகள்

பிரிட்டன் மீது சைபர் தாக்குதல் : புடினின் அறிவிப்பால் பதற்றத்தில் உலகம்

Share

பிரிட்டன் மீது சைபர் தாக்குதல் : புடினின் அறிவிப்பால் பதற்றத்தில் உலகம்

உக்ரைனுக்கு(ukraine) உதவும் பிரிட்டன்(uk) உள்ளிட்ட நாடுகள் மீது ரஷ்யா சைபர் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவதை அடுத்து உலக நாடுகளிடையே பதற்றமான சூழல் அதிகரித்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்யா(russia) மற்றும் உக்ரைன் இடையே நேட்டோ விவகாரத்தில் 3 ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. இதில் இருதரப்பிலும் பெரும் சேதங்கள் ஏற்பட்டுவிட்டன. உக்ரைனுக்கு அமெரிக்கா(us) தனது ஆயுதங்களை விநியோகித்து வருகிறது. மேலும் ரஷ்யா மீது தாக்குதல் நடத்துவதற்கு ஊக்கப்படுத்துகிறது.

அதேபோல் ரஷ்யாவுக்கு பின்னால் வடகொரியா(north korea) இருந்து கொண்டு ஆயுதங்கள், வீரர்களை அனுப்பும் வேலைகளை செய்து வருகிறது. கடந்த சில நாட்கள் முன்பு உக்ரைன், ரஷ்யா மீது நீண்டதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை ஏவியது. அதற்கு பதிலடியாக ரஷ்யாவும் தன்னிடம் உள்ள கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது. இதனால் 3 ஆம் உலக போரே ஏற்படும் நிலை உருவானது. ஆனால் போரை நிறுத்தும் எண்ணம் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி(Volodymyr Zelenskyy) மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்(viadimir putin) ஆகியோருக்கு இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.

இந்த நிலையில் உக்ரைனுக்கு உதவும் பிரிட்டன் மீது சைபர் தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டு இருப்பது தெரியவந்துள்ளது. ஏற்கனவே ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், உக்ரைனுக்கு உதவும் நாடுகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்து இருந்தார்.

இந்த நிலையில் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் மீது ரஷ்யா சைபர் தாக்குதல் நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உக்ரைனுக்கு எதிரான போரில் பல்வேறு நாடுகளை ரஷ்யா பகைத்து உள்ளது. இந்த நிலையில் உக்ரைனுக்கு ஆயுதங்கள் கொடுத்து உதவும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் மீது சைபர் தாக்குதல் நடத்த ரஷ்யா ஆயத்தமாகி வருவதாக கூறப்படுகிறது. அப்படி சைபர் தாக்குதல் தொடங்கினால் உலக அளவில் பெரும் பாதிப்புகளை சந்திக்க வேண்டி இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
1728539417 vimalveravamnsa 2
செய்திகள்அரசியல்இலங்கை

நவம்பர் 21 எதிர்ப்புப் பேரணி: தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்க மறுப்பு – விமல் வீரவங்ச அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என தேசிய...

MediaFile 4 1
செய்திகள்இலங்கை

தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் சி.மூ. இராசமாணிக்கத்தின் புதல்வர், பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தை காலமானார்!

தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசாமாணிக்கம் சாணக்கியனின் தந்தையாரும், மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்...

13144814 trump visa
செய்திகள்உலகம்

அமெரிக்க விசா விண்ணப்பதாரர்களுக்கு புதிய நிபந்தனைகள்: உடல் பருமன், நீரிழிவு இருந்தால் விசா நிராகரிக்கப்படலாம் – ட்ரம்ப் நிர்வாகம் உத்தரவு!

அமெரிக்காவில் வசிப்பதற்காக விசா விண்ணப்பிக்கும் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு, நீரிழிவு (Diabetes) அல்லது உடல் பருமன் (Obesity)...