tamilnaadid 2 scaled
உலகம்செய்திகள்

அணுகுண்டு வீசும் விமானத்தில் பயணித்த புடின்

Share

அணுகுண்டு வீசும் விமானத்தில் பயணித்த புடின்

ரஷ்ய ஜனாதிபதி புடின், திடீரென அணுகுண்டு வீசும் விமானம் ஒன்றில் பயணித்த செய்தி ரஷ்யர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதன் பின்னணியில் பல காரணங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

உக்ரைன் போர் துவங்கியதிலிருந்தே, பிரித்தானியா உட்பட, தங்களை விமர்சிக்கும் நாடுகள் மீது அணுகுண்டு வீசி காணாமல் போகச் செய்துவிடுவோம் என புடின் ஆதரவாளர்கள் மிரட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.

இந்நிலையில், நேற்று, திடீரென அணுகுண்டு வீசும் விமானம் ஒன்றில் ஏறி, விமானியுடன் சக விமானியாக பயணித்துள்ளார் புடின்.

அவர் பயணித்த விமானம், நேட்டோ அமைப்பால் Blackjack என அழைக்கப்படும் Tu-160 வகை அணுகுண்டு வீசும் விமானம் ஆகும்.

புடினுடைய இந்த திடீர் ஸ்டண்டுக்குப் பின்னால் பல காரணங்கள் இருப்பதாக கருதப்படுகிறது. சமீபத்தில் ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவரும், புடின் விமர்சகருமான அலெக்சி நவல்னி உயிரிழந்த விடயம் உலகம் முழுவதும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

அதிலிருந்து உலகின் கவனத்தைத் திசை திருப்பவும், மேற்கத்திய நாடுகளுக்கு ஒரு அணுகுண்டு மிரட்டல் செய்தியை தெரிவிக்கவும், புடின் அந்த அணுகுண்டு வீசும் விமானத்தில் பயணித்ததாக கருதப்படுகிறது.

அத்துடன், அடுத்த மாதம் ரஷ்யாவில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மீண்டும் ஜனாதிபதியாக ஆக தன்னை தகுதியுடையவராக காட்டிக்கொள்ளவும், உக்ரைனை விடமாட்டேன் என உக்ரைனுக்கு ஒரு செய்தி அனுப்புவதற்காகவும், புடின் இந்த திடீர் விமானப் பயணத்தை மேற்கொண்டதாக கருதப்படுகிறது.

இதற்கிடையில், புடின் அணுகுண்டு வீசும் விமானத்தில் பயணித்த விடயம் அவரது ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இரண்டு நாட்களில், இரண்டாவது முறையாக, அணுகுண்டு வீசும் விமானத்தில் புடினை மீண்டும் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது என்று கூறி ரஷ்ய அரசு தொலைக்காட்சி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது.

போர் விமானம் ஒன்றில் புடின் பயணிப்பது, இது மூன்றாவது முறையாகும். அவர், இதற்கு முன், 2000ஆம் ஆண்டில் ஒரு முறையும், 2005இல் ஒரு முறையும் போர் விமானங்களில் பயணித்தது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையில் மழை மற்றும் கடும் வெப்பம்: வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 06, 2026) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை...

world 8
உலகம்செய்திகள்

லெபனானில் இஸ்ரேல் வான் தாக்குதல்: ஈஸ்டர் தினத்தில் 4 வயது குழந்தை உட்பட 7 பேர் பலி!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு லெபனானின் கஃபர்ஹதா (Kafr Hatta) கிராமத்தின்...

world 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமகமவில் இன்று 12 மணிநேர நீர்வெட்டு!

தற்போது நிலவி வரும் கடும் வறண்ட வானிலை காரணமாக, ஹோமகம மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்...

world 6
செய்திகள்உலகம்

உள்கட்டமைப்பைத் தாக்கினால் பதிலடி: டிரம்பிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான மிலிட்டரி அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானின் உள்கட்டமைப்புகள்...