கனடாவில் மாகாண இடைத்தேர்தலில் களமிறங்கும் தமிழ்ப் பெண்!

களமிறங்கும் தமிழ்ப் பெண்

களமிறங்கும் தமிழ்ப் பெண்!

ஸ்கார்பரோ-கில்ட்வுட் தொகுதியில் நடைபெறவுள்ள ஒன்றாரியோ மாகாண சபை உறுப்பினர் தெரிவுக்கான இடைத்தேர்தலில் தட்ஷா நவநீதன் போட்டியிடவுள்ளார்.

இந்த தொகுதிக்கான இடைதேர்தல் இந்த மாதம் 27ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.

குறித்த இடைத்தேர்தலில் ஒன்றாரியோ மாகாண புதிய ஜனநாயக கட்சியின் வேட்பாளராக தட்ஷா நவநீதன் அறிவிக்கப்பட்டார்.

ஸ்கார்பரோ-கில்ட்வுட் தொகுதியில் எங்கள் வேட்பாளராக தட்ஷா நவநீதனை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என ஒன்றாரியோ NDP தலைவர் Marit Stiles தெரிவித்தார்.

இந்த அறிவிப்பு கடந்த வெள்ளிக்கிழமை (30-06-2023) காலை மேற்கொள்ளப்பட்டது.

நேற்றைய தினம் சனிக்கிழமை (01-07-2023) நடைபெறும் வேட்பு மனு கூட்டத்தில் ஸ்கார்பரோ-கில்ட்வுட் தொகுதி கட்சி உறுப்பினர்களால் இந்த நியமனம் உறுதி செய்யப்படும் என புதிய ஜனநாயக கட்சி தெரிவித்துள்ளது.

 

Exit mobile version