பங்களாதேஷில் முகமது யூனுஸ் தலைமையில் அமைக்கப்பட்ட இடைக்கால அரசாங்கம் நேற்று ஜூலை சாசனத்தில் கையெழுத்திட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான மக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் கூடிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தைக் கட்டுப்படுத்த மக்களை கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் வலியுறுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், இந்தப் போராட்டத்தில் பதற்றநிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, காவல்துறையினரால் கண்ணீர்ப்புகைக்குண்டுகள் வீசப்பட்டதாகவும், போராட்டக்காரர்களை நோக்கித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
புதிய சாசனம் மக்களின் கவலைகளை நிவர்த்தி செய்யவில்லை என்று கோரி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.