23 64895d81a9abf
உலகம்செய்திகள்

பிரான்ஸ் ஜனாதிபதி இந்தியா வந்துள்ள நிலையில் பிரான்சில் வெடித்துள்ள போராட்டங்கள்

Share

பிரான்ஸ் ஜனாதிபதி இந்தியா வந்துள்ள நிலையில் பிரான்சில் வெடித்துள்ள போராட்டங்கள்

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், இந்தியாவின் சுதந்திர தின விழாக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள நிலையில், பிரான்சில் சில பகுதிகளில் போராட்டங்கள் வெடித்துள்ளன.

பிரான்ஸ் அரசு, புதிய புலம்பெயர்தல் சட்டம் ஒன்றை நிறைவேற்றும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. அந்த சட்டம், விரும்பத்தகாதவர்கள் என கருதப்படும் வெளிநாட்டவர்களை நாடுகடத்துவதை எளிதாக்குகிறது, வெளிநாட்டவர்கள் அரசு உதவிகளை பெறுவதையும், பிரான்ஸ் நாட்டில் வாழும் வெளிநாட்டவர்கள் தங்கள் குடும்பத்தினரை பிரான்சுக்கு அழைத்துவருவதையும் அச்சட்டம் கடினமாக்குகிறது.

இந்நிலையில், அந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமேற்கு பிரான்சில் மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். Brittany பகுதியில் வன்முறை வெடித்துள்ளது.

பேரணியில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள், பொலிசார் மீதும் கடைகள் மீதும் கற்களை வீசித் தாக்கியுள்ளார்கள். கண்ணாடிக் கதவு ஜன்னல்கள் உடைந்துள்ளன, குப்பைத்தொட்டிகள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன.

அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்படுகின்றன. போராட்டக்காரர்களை கலைக்க பொலிசார் கண்ணீர் புகை குண்டுகளை பிரயோகித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில், அந்த சட்டத்தில் இடம்பெற்றுள்ள சில விடயங்களுக்கு நாட்டின் அரசியல் சாசன நீதிமன்றமே எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...