கனடாவின் பல நகரங்களின் நகர மண்டபங்களில் பாலஸ்தீனியக் கொடிகள் ஏற்றப்பட்டுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இஸ்ரேல் ஆதரவுக் குழுவான தஃப்சிக் (Tafsik) அமைப்பு நீதிமன்றத்தை நாடியுள்ளது. நகரங்களில் கொடி ஏற்றுவதைத் தடை செய்யுமாறு கோரி தஃப்சிக் மனுத் தாக்கல் செய்துள்ளது.
சமூக ஊடகங்களில், நகர மண்டபங்களில் கொடி ஏற்றப்பட்ட இந்த விடயம் யூத சமூகத்திற்கு எதிரான வன்முறையினைத் தூண்டலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்முறையைத் தடுக்கும் நோக்கில் பொறுப்பான குழுவின் செயல்பாட்டிற்குத் தாம் ஆதரவு வழங்குவதாகத் தஃப்சிக் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.சம்பந்தப்பட்ட தரப்பினர் இன்று (நவம்பர் 18) நீதிமன்றத்தில் பிரசன்னமாவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகர மண்டபங்களில் கொடி ஏற்றுவது புதியதல்ல. இந்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து இஸ்ரேலிய சுதந்திர தினத்திற்கான இஸ்ரேலியக் கொடி உட்படப் பல கொடிகள் நகர மண்டபங்களில் ஏற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

