இளவரசி டயானாவின் கார் ரூ.6 கோடிக்கு ஏலம்

1753288 princess diana

இங்கிலாந்து இளவரசி டயானா கடந்த 1997-ம் ஆண்டு ஆகஸ்டு 31-ந்தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்த கார் விபத்தில் பலியானார். அவரது 25-வது நினைவு தினம் விரைவில் கொண்டாடப்படவுள்ளது.

இந்த நிலையில் இளவரசி டயானா 1985 முதல் 1988 வரை பயன்படுத்திய போா்டு எஸ்காா்ட் வகையைச் சேர்ந்த ஒரு கார் இங்கிலாந்தில் நேற்று முன்தினம் ஏலத்தில் விடப்பட்டது.

இந்த ஏலத்தில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா, துபாய் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த செல்வந்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

1 லட்சம் பவுண்டில் (சுமார் ரூ.93 லட்சம்) ஆரம்பிக்கப்பட்ட ஏலம், பலத்த போட்டிக்கிடையே 6 லட்சத்து 50 ஆயிரம் பவுண்டில் (சுமார் ரூ.6 கோடியே 10 லட்சம்) நிறைவடைந்தது. இங்கிலாந்தை சேர்ந்த நபர் காரை ஏலத்தில் எடுத்தார்.

#World

Exit mobile version