இளவரசி டயானாவின் வயது குறித்து எழுந்துள்ள சர்ச்சை

24 662ad5fa09df5

இளவரசி டயானாவின் வயது குறித்து எழுந்துள்ள சர்ச்சை

பிரித்தானிய இளவரசி டயானா (Diana, Princess of Wales) தனது வயதை வேண்டுமென்றே மறைத்து அவரது முதல் வேலைக்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1979ஆம் ஆண்டு தனது முதல் வேலைக்காக விண்ணப்பித்துள்ள டயானா குழந்தைகளைக் கவனித்துக்கொள்ளும் அந்தப் பணிக்கான ஒப்பந்தம் ஒன்றில் அவர் வெளியிட்டுள்ள விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

குறித்த ஒப்பந்தத்தில், டயானா தனது வயதை வேண்டுமென்றே மாற்றி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அவரது பிறந்த தினம் 1961, ஜூலை 1 எனவும் ஆனால் அவர் அந்த ஆவணத்தில் தனது பிறந்த திகதியை 1960, ஜூலை 1 என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது, அந்த வேலை கிடைக்கவேண்டும் என்பதற்காக, தன்னை அதிக வயதுள்ளவர் என காண்பிப்பதற்காக டயானா தனது பிறந்த திகதியை மாற்றி குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உலகின் பிரபலமான நபர்களில் ஒருவர் என கருதப்படும் பிரித்தானிய இளவரசிக்கு இன்றும் உலகில் ஏராளமான ரசிகர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version