24 65fad0f9859d1
உலகம்செய்திகள்

இளவரசர் வில்லியமுக்கு பிரபல ஜோதிடர் எச்சரிக்கை

Share

மன்னர் சார்லசுக்கு உடல் நலம் பாதிக்கப்படும் என துல்லியமாக கணித்த பிரபல ஜோதிடர் ஒருவர், இளவரசர் வில்லியமுடைய நலன் கருதி அவருக்கு நான்கு ஆலோசனைகளைத் தெரிவித்துள்ளார்.

எலிசபெத் மகாராணியின் மரணம் முதல் எலான் மஸ்க் ட்விட்டரில் செய்ய இருக்கும் மாற்றங்கள் வரை துல்லியமாக கணித்தவர், வாழும் நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படும் பிரபல ஜோதிடக்கலைஞரான ஏதோஸ் (Athos Salomé).

சார்லஸ் மன்னராக முடிசூடப்படும் முன்பே, அவரது உடல் நலம் குறித்து எச்சரித்திருந்தார் ஏதோஸ். சார்லஸ் தமது உடல் நலன் தொடர்பில் இருமடங்கு கவனம் செலுத்த வேண்டும் என்றும் மன்னர் சார்லஸின் சிறுநீரக மற்றும் இனப்பெருக்க அமைப்பில் பிரச்சினைகள் ஏற்படலாம் எனவும் கணித்திருந்தார் அவர். அவர் கணித்ததுபோலவே, மன்னர் சார்லஸ், புரோஸ்ட்ரேட் வீக்கத்தாலும் புற்றுநோயாலும் பாதிக்கப்பட்டார்.

இளவரசர் வில்லியம், அரியணையேறுவதற்கு அவசரப்படக்கூடாது என்று கூறியுள்ள ஏதோஸ், அவர் தன் உடல் நலத்துக்கு நன்மை ஏற்படுவதற்காக நான்கு விடயங்களைச் செய்யவேண்டும் என்று கூறியுள்ளார் ஏதோஸ்.

1. எதிர்கால மன்னராகும் நிலையை அடைய மன்னர் சார்லசுடைய மற்றும் இளவரசி கேட்டுடைய உடல் நலப் பிரச்சினைகளிலிருந்து இளவரசர் வில்லியம் பாடம் கற்றுக்கொள்ளவேண்டும்.

2. மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக தொண்டு நிறுவனங்களில் தன்னார்வலராக செயலாற்றவேண்டும்.

3. தனது மார்பு மற்றும் நுரையீரல் நலனில் கவனம் செலுத்தவேண்டும்.

4. தந்தையிடமிருந்து ஆட்சியைப் பெறுவதற்கு பொறுமை காக்கவேண்டும்.

மேலும், இளவரசர் வில்லியமுக்கு மாற்றக்காலகட்டம் ஒரு காத்திருக்கிறது என்று கூறியுள்ள ஏதோஸ், தனது வாழ்வில் சந்தித்த அனுபவங்கள் மூலம் அவர் வாய்ப்புகளையும் சவால்களையும் எதிர்கொள்ளத் தயாராகிவருகிறார் என்றும் கூறியுள்ளார்.

என்றாலும், இளவரசர் வில்லியமுக்கும் உடல் நல பாதிப்பு ஒன்று ஏற்படலாம் என ஏதோஸ் எச்சரித்துள்ளது கவலையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...