மன்னர் சார்லசுடன் சேரும் வாய்ப்பை தவறவிட்ட இளவரசர் ஹரி
ராஜ குடும்பத்தைவிட்டு வெளியேறி, பெற்றோரையும் உறவினர்களையும் அவமதித்த நிலையிலும், இளவரசர் ஹரியை மன்னிக்க மன்னர் சார்லஸ் தயாராக இருக்கிறார். ஆனால், மன்னருடன் ஒப்புரவாகும் ஒரு அரிய வாய்ப்பை சமீபத்தில் ஹரி தவறவிட்டுவிட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
தனது பாட்டியாரான மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் முதலாம் ஆண்டு நினைவு நாளுக்காக பிரித்தானியா வர திட்டமிட்ட ஹரி, ராஜ அரண்மனையில் தங்குவதற்கு முறைப்படி மன்னருடைய அலுவலகத்தில் அனுமதி கோரியதுடன், பாதுகாப்பும் கோரினாராம்.
ஆனால், விண்ட்ஸர் மாளிகையிலோ லண்டனிலோ எந்த வீடும் காலியாக இல்லை என மூத்த அலுவலர் ஒருவர் மரியாதையுடன் அவருக்கு பதிலளித்தாராம்.
அதற்கு பதிலாக, மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமீலாவுடன் பால்மோரல் மாளிகையில் ஹரி தங்கலாம் என அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், தனது பயணத்திட்டம் காரணமாக, தான் பால்மோரலில் தங்குவது சாத்தியமில்லை என்று கூறிவிட்டாராம் ஹரி. மறுநாள் தனியாக சென்று மகாராணியாருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு ஜேர்மனிக்கு புறப்பட்டுவிட்டார் ஹரி. ஹரியின் பதிலைக் கேட்டு ராஜ குடும்ப நிபுணர்கள் வியப்படைந்துள்ளார்கள். Ingrid Seward என்னும் ராஜ குடும்ப எழுத்தாளர், மன்னர் யாரையாவது பால்மோரல் மாளிகைக்கு அழைத்திருந்தால், அவர்கள் தங்கள் பயணத்திட்டங்கள் அனைத்தையும் ரத்து செய்துவிட்டு மன்னரைக் காணச் சென்றிருப்பார்கள்.
ஹரியும் மன்னரைக் காணச் சென்றிருக்கவேண்டும். தனது பயணத்திட்டத்தை அவர் சிறிது மாற்றி அமைத்திருக்கலாம். ஆனால், அவர் அருமையான வாய்ப்பைத் தவறவிட்டு விட்டார் என்கிறார்.