சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் மாற்றம்
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
இன்றைய தினத்திற்கான (18.05.2024) நிலவரப்படி இந்த தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.06 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
இதேவேளை பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 83.98 அமெரிக்க டொலராக நிலவுகிறது.
மேலும், உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.62 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.