ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

24 662cffd278acb

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து சுமார் 1,000 கி.மீ. தொலைவில் போனின் தீவுகள் அல்லது ஒகாசவரா தீவுகளின் வடக்கு கடற்கரை பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கமானது ரிச்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வு மத்திய டோக்கியோ வரை உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version