வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

MediaFile 7 1

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையத்தின்படி, இந்த நிலநடுக்கம் 6.7 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இவாட் கடற்கரைக்கு (Iwate coast) சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தை அடுத்து ஒரு மீட்டர் (மூன்று அடி) உயரம் வரை சுனாமி அலைகள் உருவாக்கக்கூடும் என்று ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.

இந்த அலைகள் உடனடியாக வரக்கூடும் என்பதால் கடலோரப் பகுதிகளைத் தவிர்க்குமாறு குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்திப்பட்டுள்ளது.

இதேவேளை, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜெர்மன் புவியியல் ஆய்வு மையத்தின்படி, இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆகப் பதிவானது.

இந்த நிலநடுக்கம் 90 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

Exit mobile version