அவுஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற பொலிஸார்

24 6637dcc9d2ddd

அவுஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற பொலிஸார்

அவுஸ்திரேலியாவின்(Australia) பெர்த்தின் புறநகர் பகுதியான வில்லெட்டனில் 16 வயது சிறுவன் ஒருவன் கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டதோடு பொதுமக்களை கத்தியால் குத்தி தாக்கியுள்ளான்

இதையறிந்ததும் பொலிஸார் குறித்த சம்பவ இடத்திற்கு சென்றபோது அந்த சிறுவன் கத்தியுடன் பொலிஸாரை நோக்கி வந்துள்ளான்.

இந்நிலையில் அவனை கத்தியைக் கீழே போடுமாறும், சரண் அடையும்படியும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஆனால் அதற்கு மறுத்த சிறுவன் தொடர்ந்து தாக்குதல் நடத்த முயன்றதால் அவன் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

பின்னர் அவனை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகிறார்கள்.

Exit mobile version