அப்பாச்சி ரக தாக்குதல் ஹெலிகாப்டரை வாங்கும் நாடு

tamilni 291

அப்பாச்சி ரக தாக்குதல் ஹெலிகாப்டரை வாங்கும் நாடு

போலந்துக்கு அப்பாச்சி ரக தாக்குதல் ஹெலிகாப்டர்களை வழங்க அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது.

பெலாரஸ் போலந்து நாட்டின் எல்லைக்கு அருகில் பிரமாண்ட இராணுவ பயிற்சியை நடத்தியுள்ளது.

இதனால் இரு நாடுகளின் எல்லையிலும் பதற்றம் அதிகரித்த நிலையில், போலந்து வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் பிரம்மாண்டமான ராணுவ ஆயுத அணிவகுப்பு நிகழ்ச்சியை தலைநகரில் சமீபத்தில் அரங்கேற்றியது.

இந்த அணிவகுப்பு நிகழ்ச்சி பெலாரஸ் நாட்டிற்கு மட்டுமின்றி ரஷ்யாவிற்கும் வழங்கப்படும் தக்க எச்சரிக்கை என சில மேற்கத்திய நாடுகள் கருத்து தெரிவித்தது.

இந்நிலையில் அப்பாச்சி ரக தாக்குதல் ஹெலிகாப்டர்களை போலந்து நாட்டிற்கு வழங்கும் ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, சுமார் 12 பில்லியன் டொலருக்கு 96 ஹெலிகாப்டர்கள், 210 இயந்திரங்கள் மற்றும் பிற உபகரணங்களை போலந்து வாங்க உள்ளது. poland-buy-64e-apache-attack-helicopters-from-us இதற்கு முன்னதாக அமெரிக்காவிடம் இருந்து ஆப்ராம்ஸ் டாங்கிகளை போலந்து வாங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version