துப்பாக்கியைப் பிடுங்கிய ‘ஹீரோ’ அஹமது அல் அஹமதுவைச் சந்தித்த பிரதமர் அல்பானீஸ்; துப்பாக்கிக் கட்டுப்பாடு மேலும் அதிகரிப்பு!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் (Bondi Beach) யூதர்கள் நிகழ்வில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டின்போது, துணிச்சலுடன் செயல்பட்டுத் தாக்குதலாளியின் துப்பாக்கியைப் பிடுங்க முயன்று குண்டடிப்பட்ட அஹமத்-அல்-அஹமதுவை (Ahmad-Al-Ahmad) அந்நாட்டுப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் (Anthony Albanese) வைத்தியசாலையில் சந்தித்து நலம் விசாரித்தார்.

அஹமது-அல்-அஹமதுவின் துணிச்சலைக் கண்டு நெகிழ்ந்த பிரதமர், அவரிடம் உரையாடுகையில் “மற்றவர்களைக் காப்பாற்றுவதற்காக ஆபத்தில் ஆழ்த்திக் கொண்ட உங்களுக்கு, ஒவ்வொரு அவுஸ்திரேலியர் சார்பாகவும் நன்றி கூறுகிறேன். நீங்கள் தான் அவுஸ்திரேலியாவின் ஹீரோ!” – அந்தோணி அல்பானீஸ், பிரதமர்.

அஹமதுவின் இந்தச் சாகசச் செயலால் மேலும் பல உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன என்று மக்கள் நம்புவதால், அவர் தேசிய “ஹீரோ”வாகப் போற்றப்படுகிறார்.

அவுஸ்திரேலியாவில் ஏற்கனவே துப்பாக்கி வைத்திருக்கக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும், இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்தச் சூழ்நிலையில், துப்பாக்கிக் கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்க அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் முடிவெடுத்துள்ளார். ஏனெனில், இந்தச் சம்பவத்தில் பலியான சஜித் என்பவர் மட்டுமே 6 துப்பாக்கிகளை வைத்திருந்தது விசாரணையில் தெரிய வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version