விமானம் விபத்து!

1780870 ukraine

மெக்சிகோவிலிருந்து கோஸ்டாரிகா நாட்டின் லிமோன் விமான நிலையத்திற்கு ஐந்து ஜேர்மன் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட சிறிய ரக விமானம், கோஸ்டாரிகா கடற்கரை அருகே விபத்துக்குள்ளானது.

ரிசார்ட் நகரமான லிமோனுக்குச் சென்று கொண்டிருந்தபோது அந்த விமானம் ரேடார் கண்காணிப்பில் இருந்து காணாமல் போனதாக, கோஸ்டாரிகா பாதுகாப்பு அமைச்சர் டோரஸ் தெரிவித்தார்.

ஒன்பது இருக்கைகள் கொண்ட இத்தாலி தயாரிப்பான அந்த விமானத்தின் துண்டுகள் கடலில் கண்டெடுக்கப்பட்டதாக கோஸ்டாரிகா அதிகாரிகள் தெரிவித்தனர்.

விமான பயணிகள் குறித்த தேடுதல் நடவடிக்கை உடனடியாக தொடங்கிய நிலையில் மோசமான வானிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்த விபத்தில் ஜேர்மன் தொழிலதிபர் உள்பட 6 பேர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியான நிலையில் இதுவரை எந்த உடல்களும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று கோஸ்டாரிகாவின் பாதுகாப்பு துணை அமைச்சர் மார்ட்டின் அரியாஸ் தெரிவித்துள்ளார்.

#Worldnews

Exit mobile version