நைஜீரியாவில் மோதலில் 113 பேர் பலி

tamilnif 21

நைஜீரியாவில் இரண்டு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற மோதலில் 113 பேர் உயிரிழந்துள்ளதா தெரிவிக்கப்படுகின்றது.

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் பிளாட்டியூ மாகாணத்தில் உள்ள மன்ஷு கிராமத்தில் வசிக்கும் இரு தரப்பினர் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் இந்த கருத்து வேறுபாடானது மோதலாக மாறியதை தொடர்ந்து இரு தரப்பினரும் கையில் கிடைத்த பொருள்களை ஆயுதங்களாக பயன்படுத்தி ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டுள்ளனர்.

குறித்த மோதலினால் இருதரப்புகளையும் சேர்த்து 113 பேர் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.மேலும், 300ற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்ததுடன் நிலைமையை கட்டுப்படுத்த இராணுவத்தினரின் அனுமதியை கோரியுள்ளதாக கூறப்படுகிறது.

Exit mobile version