காலநிலை மாற்றத்தால் அரிய உயிரினங்கள் பல அழிந்து வருகின்றன.
கடற்பறவைகளாக கருதப்படும் பென்குயின்களுக்கும் இந் நிலைமைக்கு தற்போது தள்ளப்பட்டுள்ளன.
தென் ஆபிரிக்க தலைநகர் கேப் நகரை அண்மித்து, இருக்கும் சைமோன்ஸ்டவுன் பகுதியில் தேனீக்கள் கொட்டி 63 பென்குயின்கள் உயிரிழந்துள்ளன.
பென்குயின்களின் கண்களை சுற்றி தேனீக்கள் கடித்த காரணத்தால் இந்த மரணம் நிகழ்ந்துள்ளது என அவற்றின் உடற்கூற்று சோதனையில் தெரிய வந்துள்ளது.
“இது யோசித்து பார்க்க முடியாத அரிதான நிகழ்வு, இவ்வாறு நடக்கும் என்று யாரும் நினைத்து பார்க்கவில்லை, இது எங்களுக்கு மிக மோசமான நாள்” என்று பென்குயின்களை சோதனை செய்த தென் ஆபிரிக்க விலங்குகள் மற்றும் பறவைகள் தொண்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் இயற்கை ஆர்வலர்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.