தடுப்பூசி போடாமல் நாட்டின் தலைநகரின் சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் ஒவ்வொரு விமான பயணிக்கும் $3,500 அபராதம் விதிக்கப்படும் என்று கானா அரசு அறிவித்துள்ளது.
புதன்கிழமை நடைமுறைக்கு வரும் புதிய நடவடிக்கைகளின் கீழ்,
அக்ராவில் உள்ள கோட்டோகா சர்வதேச விமான நிலையத்திற்கு விமானத்தில் ஏறும் முன் சுகாதார அறிவிப்பு படிவத்தை நிரப்பாத பயணிகளுக்கும் அதே தொகை அபராதம் விதிக்கப்படும் என்று அரசுக்கு சொந்தமான கானா விமான நிலைய நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறித்த படிவத்தை பூர்த்தி செய்யாமல் அபராதத்தை செலுத்திவிட்டு வெளிநாடுகளுக்குச் செல்லும் கானா நாட்டினர், மீண்டும் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டாலும், 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.
எனினும் வெளிநாட்டினருக்கு நுழைவு மறுக்கப்படலாம் என்று விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.
#SrilankaNews
Leave a comment