13 27
உலகம்செய்திகள்

மனித இனம் இதுவரை கண்டிராத பேரழிவு… பாபா வங்காவைப்போல் ஒரு புதிய தீர்க்கதரிசியின் எச்சரிக்கை

Share

மனித இனம் இதுவரை கண்டிராத பேரழிவு… பாபா வங்காவைப்போல் ஒரு புதிய தீர்க்கதரிசியின் எச்சரிக்கை

பாபா வங்காவும் நாஸ்ட்ரடாமஸும் ஏற்கனவே 2025ஆம் ஆண்டில் நிகழவிருக்கும் பேராபத்துக்கள் குறித்து கணித்து பலருக்கும் பயத்தை ஏற்படுத்திவிட்டார்கள்.

இந்நிலையில், புதிதாக ஒரு தீர்க்கதரிசி மனித இனம் இதுவரை கண்டிராத பேரழிவு குறித்து எச்சரித்துள்ள செய்தி கவனம் ஈர்த்துள்ளது.

2024ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 14ஆம் திகதி, அமெரிக்காவின் ஓக்லஹாமாவைச் சேர்ந்த பாதிரியாரான பிராண்டன் டேல் பிக்ஸ் (Brandon Dale Biggs) என்பவர், யூடியூபில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அந்த வீடியோவில், ட்ரம்பைக் கொல்ல ஒருவர் முயன்றதை தான் கண்டதாக தெரிவித்திருந்தார் பிராண்டன்.

’ட்ரம்ப் எழுவதைக் கண்டேன், அவரை நோக்கி ஒரு துப்பாக்கி குண்டு பாய்ந்தது, அவரது தலைக்கு அருகில் வந்த அந்த குண்டு அவரது காதைத் தாக்கிவிட்டு சென்றுவிட்டது.

அவர் முழங்காலிட்டதையும், கடவுளுக்கு நன்றி சொன்னதையும் நான் பார்த்தேன்’ என்று கூறியிருந்தார் பிராண்டன்.

அப்படியே, அவர் சொன்னதுபோலவே, சில மாதங்களுக்குப் பின் பெனிசில்வேனியாவில் தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என்னும் நபர் ட்ரம்பை துப்பாக்கியால் சுட்டார், குண்டு ட்ரம்பின் காதைத் தொட்டுச் சென்றது!

இந்நிலையில், அமெரிக்காவில் நிகழவிருக்கும் மற்றொரு பாரிய பேரழிவு குறித்து எச்சரித்துள்ளார் பிராண்டன்.

அமெரிக்காவில் பாரிய நிலநடுக்கம் ஒன்று நிகழப்போவதை கடவுள் தனக்குக் காட்டியதாக தெரிவிக்கிறார் பிராண்டன்.

அமெரிக்காவை ரிக்டர் அளவில் 10 ஆக பதிவாகும் நிலநடுக்கம் ஒன்று தாக்க இருப்பதாக தெரிவித்துள்ளார் பிராண்டன்.

அந்த நிலநடுக்கம் மிஸ்ஸௌரி, ஆர்க்கன்சாஸ், டென்னசீ, கெண்டக்கி மற்றும் இல்லினாயிஸ் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள நிலநடுக்க பகுதியில் ஏற்படும் என்று கூறியுள்ளார் பிராண்டன்.

தான் கண்ட காட்சியில், அந்த நிலநடுக்கத்தால் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை 1,800 பேர் உயிரிழந்ததாகவும் கட்டிடங்கள் முழுமையாக விழுந்து நொறுங்கிப்போனதாகவும் தெரிவித்துள்ளார் பிராண்டன்.

அத்துடன், அந்த நிலநடுக்கம் ஏற்படுத்திய பாதிப்பால், மிசிசிப்பி நதியே வேறு பாதையில் திரும்பி ஓட ஆரம்பித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார் பிராண்டன்.

ஆனால், ரிக்டர் அளவில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட அளவுடைய நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பில்லை என்கிறது அமெரிக்க நிலவியல் ஆய்வமைப்பான USGS.

Share
தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...