tamilni 289 scaled
உலகம்செய்திகள்

உலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு

Share

உலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு

ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் (Henley Passport Index) 2023ஆம் ஆண்டிற்கான கடவுச்சீட்டு தரவரிசை பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

அந்தவகையில் எந்த நாட்டினுடைய கடவுச்சீட்டு மிகவும் சக்தி வாய்ந்தது என்பதனடிப்படையில் 2023ஆம் ஆண்டுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஹென்லி பாஸ்போர்ட் தரவரிசை என்பது ஒரு குறிப்பிட்ட நாட்டின் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள், pre – departure விசா விண்ணப்பம் இல்லாமல், எத்தனை நாடுகளுக்கு செல்லலாம் என்பதன் அடிப்படையில், உலகம் முழுவதும் உள்ள அனைத்து கடவுச்சீட்டுகளின் வலிமையையும் அளவிடுகிறது.

அதனடிப்படையில் இந்த ஆண்டின் தரவரிசைபடி சிங்கப்பூரின் கடவுச்சீட்டு முதலிடத்தை பிடித்துள்ளது.

இரண்டாவது இடத்தை ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளின் கடவுச்சீட்டுகள் பெற்றுள்ளதுடன் அவுஸ்திரேலியா, பின்லாந்து, பிரான்ஸ், லக்சம்பர்க், தென் கொரியா, சுவீடன மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் கடவுச்சீட்டுகள் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளன.

இதேவேளை இங்கிலாந்து கடவுசீட்டு 4ஆவது இடத்தையும், அமெரிக்காவின் கடவுச்சீட்டு 8ஆவது இடத்தையும் பெற்றுள்ளதுடன் உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுசீட்டு பட்டியலில் இந்தியாவின் கடவுச்சீட்டு 80ஆவது இடத்தை பெற்றுள்ளது.

மேலும் பாகிஸ்தான், இலங்கை,நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகளின் கடவுச்சீட்டுகள் பலவீனமானவை என குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
1722752828 dds
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கை பிரஜை இராமேஸ்வரத்தில் கைது: புழல் சிறையில் அடைப்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாகச் சட்டவிரோதமாகப் புறப்பட்டு, இந்தியக் கடற்கரையை அடைந்த இலங்கை பிரஜை ஒருவர், இராமேஸ்வரத்தில்...

2 nurse
இலங்கைசெய்திகள்

தாதியர் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: 175 வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக ஆட்சேர்ப்பு – சுகாதார அமைச்சர் உத்தரவு!

நாட்டின் தாதியர் கல்லூரிகளில் (Nursing Colleges) தாதியர் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக, ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு...

MediaFile 3 1
செய்திகள்அரசியல்இலங்கை

போதைப்பொருள் உற்பத்தி வழக்கு: சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான பேருந்து, கார், கெப் வாகனம் பறிமுதல்!

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் ஒரு...

1728539417 vimalveravamnsa 2
செய்திகள்அரசியல்இலங்கை

நவம்பர் 21 எதிர்ப்புப் பேரணி: தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்க மறுப்பு – விமல் வீரவங்ச அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என தேசிய...