பாகிஸ்தானில் அதிரடி வேட்டை: பாதுகாப்புப் படையினரால் 11 தலிபான் கிளர்ச்சியாளர்கள் சுட்டுக்கொலை!

4674494 840618005

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட அதிரடித் தாக்குதலில், தடைசெய்யப்பட்ட ‘தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான்’ (TTP) அமைப்பைச் சேர்ந்த 11 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த 8-ஆம் திகதி கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், கிளர்ச்சியாளர்கள் பதுங்கியிருந்த இடத்தைச் சூழ்ந்த பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே நிகழ்ந்த கடும் துப்பாக்கிச் சமரில் 6 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர்.

இதே மாகாணத்தின் குர்ராம் பகுதியில் பாதுகாப்புப் படைகள் மேற்கொண்ட மற்றொரு கூட்டு நடவடிக்கையின் போது 5 கிளர்ச்சியாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அரசு தொடர்ச்சியாகக் குற்றம் சாட்டி வருகிறது. குறிப்பாக ‘தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான்’ அமைப்பினர் எல்லையோர மாவட்டங்களில் பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்துத் தாக்குதல்களை நடத்தி வருவதால், அவர்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

 

 

Exit mobile version