இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை

tamilni 485

இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அரச இரகசியங்களை வெளியிட்ட குற்றச்சாட்டிலேயே முன்னாள் பிரதமருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையின் போது சிறப்பு நீதிமன்ற நீதிபதி அபுல் ஹஸ்னத் சுல்கர்னைன் இன்று (30.1.2024) இந்த முடிவை அறிவித்துள்ளார்.

இந்தத் தீர்ப்பானது பெப்ரவரி 8 ஆம் திகதி இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக வந்துள்ளது.

குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள இம்ரான் கான், அரசியல் காரணங்களுக்காக இந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதாக விமர்சித்துள்ளார்.

சைபர் வழக்கு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் சிறையில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version