உலகம்செய்திகள்

இப்போது கூண்டுக்கிளி அல்ல… தன்னையே கேலி செய்த சார்லஸ் மன்னர்

24 663dce029e3ca
Share

இப்போது கூண்டுக்கிளி அல்ல… தன்னையே கேலி செய்த சார்லஸ் மன்னர்

பிரித்தானியாவில் ராணுவப் பயிற்சி கல்லூரி ஒன்றில் விஜயம் செய்துள்ள சார்லஸ் மன்னர், தற்போது கூண்டில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக தன்னையே கேலி செய்துள்ளார்.

புற்றுநோய் பாதிப்பு உறுதி செய்த பின்னர் பொது சேவைகளில் கலந்துகொள்ளத் தொடங்கியதில் இருந்து தற்போது கல்லூரி விழாவில் கலந்துகொண்டுள்ளார்.

தெற்கு இங்கிலாந்தில் அமைந்துள்ள அந்த ராணுவ கல்லூரி விழாவில் கலந்துகொண்ட சார்லஸ் மன்னர், இப்படியான ஒரு வாய்ப்பு அமைந்ததும் தம்மை கூண்டில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டதாக வேடிக்கையாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மாத இறுதியில் இருந்தே சார்லஸ் மன்னர் பொது சேவைகளில் கலந்துகொள்ள தொடங்கியிருந்தார். மன்னர் மிக ஆர்வமாக இருப்பதாகவும் அரண்மனை வட்டாரத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்லூரி விழாவில் மன்னர் கலந்துகொள்வது, அவரது இரண்டாவது நிகழ்ச்சி என்றே கூறப்படுகிறது. புதன்கிழமை பக்கிங்ஹாம் அரண்மனையில் தனது முதல் வருடாந்திர தோட்ட விருந்தை முன்னெடுத்திருந்தார்.

ஆனால் வாக்களித்துள்ள தொடர் நிகழ்ச்சிகளால், லண்டன் திரும்பியிருந்த தமது இளைய மகன் ஹரியை சந்திக்கும் வாய்ப்பை சார்லஸ் மன்னர் தவறவிட்டுள்ளார்.

கலிபோர்னியாவில் குடும்பத்துடன் குடியிருக்கும் இளவரசர் ஹரி திடீர் பயணமாக லண்டன் திரும்பியிருந்தார். ஆனால், நெருக்கடியான சூழலில், மன்னரால் தமது மகனை சந்திக்க ,முடியாமல் போயுள்ளது.

வியாழக்கிழமை இளவரசர் ஹரி உறுதி அளித்திருந்த தமது நிகழ்ச்சிகளில் பரபரப்பாக காணப்பட்டார். இதனால் வியாழக்கிழமையும் தந்தையும் மகனும் சந்திக்க முடியாமல் போனது.

இதனிடையே, லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு, ஹரி நைஜீரியா புறப்பட்டு சென்றுவிட்டார் என்றே தெரியவந்துள்ளது.

Share
Related Articles
29 2
உலகம்செய்திகள்

செங்கடலில் அடுத்தடுத்து அமெரிக்க போர் விமானங்கள் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்!

செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில்...

26 4
உலகம்செய்திகள்

பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம்

அதிரவைக்கும் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ள விடயத்தால் இணையம் பரபரப்பாகியுள்ளது....

27 3
உலகம்செய்திகள்

அணு ஆயுத நாடுகள் 2024: இந்தியா எங்கே உள்ளது? – அதிர்ச்சி தரும் உண்மைகள்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் இருநாட்டு மக்களிடையே உச்சக்கட்ட விழிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ள...

28 3
உலகம்செய்திகள்

போரில் பாகிஸ்தான் வென்றால் அந்த இந்திய நடிகை வேண்டும் – மதகுரு சர்ச்சை பேச்சு

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்....