கனடாவில் பொதுப் போக்குவரத்து பயணிகளுக்கு அறிவித்தல்!
கனடா-ஒன்றாரியோ மாகாணத்தில் தொடருந்து மூலம் பொதுப் போக்குவரத்தில் ஈடுபடுவோருக்கு மாகாண முதல்வர் டக் போர்ட் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி,GO Transit போக்குவரத்து சேவை வாரந்தம் 300 புதிய தொடருந்து சேவைகளை ஆரம்பிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
மேலும் இந்த மாத இறுதிக்குள் இந்த தொடருந்து போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2013ம் ஆண்டின் பின்னர் மாகாணத்தில் அறிமுகம் செய்யப்பட்ட அதி கூடிய போக்குவரத்துப் பயணங்கள் இந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வார இறுதி நாட்களில் 15 நிமிடங்களுக்கு ஒரு தடவை போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து சேவை குறித்த அறிவிப்பு மில்டனில் நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Comments are closed.