சவூதி அரேபியாவிலும் ஒமிக்ரான் தொற்றுள்ள ஒருவர் கன்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
தென் ஆபிரிக்க நாடுகளில் பரவி வரும் ஒமிக்ரான்’ தொற்றுள்ள ஒருவர் சவூதி அரேபியாவில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டுச்செய்திகள் தெரிவிக்கின்றன.
மத்திய கிழக்கு நாடுகளில் ஒமிக்ரான் தொற்றுடைய ஒருவர் அடையாளம் காணப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
இதன் விளைவாக தற்போது சவூதி அரேபியாவில் சுகாதார நடவடிக்கைள் இறுக்கமாக கண்காணிக்கப்படுமெனவும் அடுத்த சில நாட் களில் தென்னாபிரிக்கா மற்றும் அதை அண்டியுள்ள நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
#world