அமைச்சர் ரோஜாவின் காலில் விழுந்த மூதாட்டிகள்! வெளியான சர்ச்சை
உலகம்செய்திகள்

அமைச்சர் ரோஜாவின் காலில் விழுந்த மூதாட்டிகள்! வெளியான சர்ச்சை

Share

அமைச்சர் ரோஜாவின் காலில் விழுந்த மூதாட்டிகள்! வெளியான சர்ச்சை

ஆந்திர மாநிலத்தின் அமைச்சர் ரோஜாவின் காலில் விழுந்து இரண்டு மூதாட்டிகள் ஆசீர்வாதம் வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவராக பூமண கருணாகரன் ரெட்டி பதவியேற்பு விழா நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் ஆந்திர அமைச்சரும், நடிகையுமான ரோஜா, திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தர்மாரெட்டி, ஒய்எஸ்ஆர் கட்சி பிரமுகர்கள் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது, தனது குடும்பத்துடன் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட ரோஜா சாமி தரிசனம் செய்துவிட்டு கோவிலில் இருந்து வெளியே வந்தார்.

இந்நிலையில், கோவிலில் இருந்து வெளியே வந்த அமைச்சர் ரோஜாவிடம் வயதான பெண்கள் இருவர் பூ, வெற்றிலை பாக்கு, பழங்கள் ஆகியவற்றை கொடுத்தனர்.

பின்னர், திடீரென அமைச்சரின் காலில் விழுந்து, அவரது காலுக்கு மஞ்சள் குங்குமம் தேய்த்து வணங்கினர். இதனை பார்த்த பொதுமக்கள் தங்களது மொபைலில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

வயதில் மூத்த பெண்கள் அமைச்சர் ரோஜாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
5 1
உலகம்செய்திகள்

காசா மீது வீசப்பட்ட 230 கிலோ குண்டு! இஸ்ரேலின் போர்க்குற்றம் அம்பலம்

காசாவில் பிரபல கடற்கரை விடுதி ஒன்றில் இஸ்ரேல் MK-82 என்ற 230 கிலோ எடை கொண்ட...

4 1
இலங்கைசெய்திகள்

செம்மணியில் கொடூரமாக கொன்று புதைக்கப்பட்ட பிஞ்சு குழந்தைகள்: அரசு தரப்பின் அதிரடி அறிவிப்பு

செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் வழக்கு விசாரணைகளுக்கு அரசாங்கத்தின் சார்பில்...

1
உலகம்செய்திகள்

செம்மணி மனித புதைகுழி விவகாரம் : கனடாவில் இருந்து வந்த கோரிக்கை

செம்மணி மனித புதைகுழியில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளமை தமிழ் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை சர்வதேசம் அங்கீகரிக்கவேண்டும், பொறுப்புக்கூறல்...

3 1
உலகம்செய்திகள்

செம்மணி விவகாரத்திற்கு சர்வதேச விசாரணை வேண்டும்.. பிரித்தானிய எம்பி கோரிக்கை

கிருஷாந்தி குமாரசாமியின் படுகொலை விடயத்தில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட்டது போல் செம்மணி மனித புதைகுழியுடன் தொடர்புடையவர்களை கண்டறிய...