7 36
உலகம்

லெபனானில் உள்ள இலங்கையர்களுக்கு வெளியான அறிவிப்பு

Share

லெபனானில் உள்ள இலங்கையர்களுக்கு வெளியான அறிவிப்பு

லெபனான் (lebanon)மீதான இஸ்ரேலின்(israel) தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில் அங்குள்ள இலங்கையர்களுக்கு(sri lanka) உதவும் வகையில் துரித தொலைபேசி இலக்கங்களை அந்த நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

லெபனானின் தெற்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் இஸ்ரேல் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பலர் கொல்லப்பட்டுள்ளதோடு, சுமார் 1500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், லெபனானில் தற்போது பெரும் பதற்றமானதொரு சூழல் நீடித்து வரும் நிலையில், அங்குள்ள இலங்கையர்களுக்கு உதவும் வகையில் துரித தொலைபேசி இலக்கங்களை அந்த நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அதற்கிணங்க, முதலாவது செயலாளரான சனத் பாலசூரியவைத் தொடர்புக் கொள்ள 009 617 038 6754 என்ற தொலைபேசி இலக்கத்தையும் மூன்றாவது செயலாளரான பிரியங்கனி திஸாநாயக்கவை தொடர்புக் கொள்ள 009 618 154 9162 என்ற தொலைபேசி இலக்கத்தையும் தூதரகம் அறிமுகம் செய்துள்ளது.

மேலும், மொழிபெயர்ப்பாளருக்கான தொலைபேசி இலக்கமாக 009 618 136 3894 எனும் இலக்கமும் லெபனானில் உள்ள இலங்கைத் தூதரகத்தினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 15
உலகம்செய்திகள்

ஈரானின் திடீர் முடிவு.. சர்வதேசத்திடமிருந்து அணுசக்தி தகவல்களை மறைக்க திட்டம்!

சர்வதேச அணுசக்தி நிறுவனத்துடனான (IAEA) ஒத்துழைப்பை நிறுத்துவதற்கான ஒரு சட்டத்திற்கு ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன்...

Murder Recovered Recovered Recovered 11
உலகம்செய்திகள்

தரையிறங்குவதற்கு சற்று முன்னர் விபத்துக்குள்ளான சோமாலிய விமானம் : மூவர் பலி

சோமாலியாவில் ஆபிரிக்கா இராணுவத்திற்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும்...

Murder Recovered Recovered Recovered 10
உலகம்செய்திகள்

கனடா பெண்ணுக்கு யாழில் நேர்ந்த சோகம்

கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த பெண்ணொருவர் பட்டா ரக வாகனம் மோதியதால் நேற்றையதினம்(02) உயிரிழந்துள்ளார். கண்டி...

Murder Recovered Recovered Recovered 8
உலகம்செய்திகள்

இந்தோனேசியாவில் படகு மூழ்கியதில் 38 பேர் மாயம்

இந்தோனேசியாவின் பாலி தீவு அருகே 65 பேருடன் சென்ற பயணிகள் படகு மூழ்கியதில் 38 பேர்...