கொரோனா வைரஸ் விட வீரியம் கூடிய வைரஸ் ஆக நியூகோவ் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இது பயங்கர உயிர்கொல்லி எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீனாவின் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அதிலிருந்து தற்போது வரை உலக நாடுகள் நிம்மதியற்ற நிலையில் உள்ளன. இதற்கான காரணம் கொரோனா வைரஸ் இன் பயங்கரமான அடுத்தடுத்த உருமாற்றங்கள் தான்.
கொரோனா வைரஸ் தொற்று டெல்டா, பீட்டா, காமா என உருமாற்றம் அடைந்தது. ஆனால் இந்த இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா மாற்றமடைந்த வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்ட வைரஸ் தொற்றை விட அதிக பாதிப்பு ஏற்படுத்தக் கூடியதாக இருந்தது.
இந்நிலையில் தென்னாபிரிக்காவில் நியோகோ எனும் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் மூன்றில் ஒருவரைக் கொல்லும் கொடிய தன்மை கொண்டது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் அல்ல. திரிவு அல்லது வவ்வாலிடமிருந்து பரவிய புதுவகையான வைரஸ் ஆக இருக்கலாம் எனவும் கண்டறிந்துள்ளனர். இதனால் உலக நாடுகள் அச்சமடைந்துள்ளன.
முதற்கட்ட சோதனை தான். முழுமையாக ஆய்வு தகவல்கள் வெளியான பின்னர் தான் பாதிப்பு குறித்து தெரியவரும்.
எனினும் தற்போதைய மனித உடலில் இருக்கின்ற நோய் எதிர்ப்பு சக்தி இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த போதுமானது இல்லை என ஆராய்ச்சிகளில் தெரியவந்துள்ளது.
Leave a comment