15 35
உலகம்செய்திகள்

விசா விதிகளை தளர்த்தி… சுற்றுலாப் பயணிகள் வேலை பார்க்கலாம் என அனுமதித்த நாடு

Share

சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தரும் போது, அவர்களின் அலுவலகப் பணிகளை முன்னெடுக்க அனுமதிக்கும் வகையில் புதிய விசா விதிகளை நியூசிலாந்து அறிமுகப்படுத்தவுள்ளது.

இதனால் சுற்றுலாத்துறையும் பொருளாதாரமும் வளர்ச்சி காணும் என்றே நியூசிலாந்து நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

நியூசிலாந்தில் பயணம் செய்யும் போது மக்கள் வேலை செய்ய அனுமதிக்கும் வகையில் ஜனவரி 27 முதல் பார்வையாளர் விசா விதிகள் மாறும் என்று குடிவரவு அமைச்சர் எரிகா ஸ்டான்ஃபோர்ட் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும், மக்கள் எங்கள் நாட்டைப் பார்வையிடவும், வேலை செய்யவும் ஏற்ற இடமாகக் காண வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எத்தனை பேர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று தெரியவில்லை எனக் குறிப்பிட்டுள்ள அவர், இங்கு வேலை செய்யவும் பயணம் செய்யவும் விரும்பும் மக்களை நியூசிலாந்து குறிவைத்துள்ளது என தெரிவித்துள்ளார்.

ஜனவரி 27ம் திகதி முதல் அமுலுக்கு வரும் இந்த புதிய விசா விதிகளின் அடிப்படையில், நியூசிலாந்தில் பயணம் மேற்கொள்பவர்கள், தங்களின் வெளிநாட்டு நிறுவனத்திற்காக பணியாற்றலாம்.

ஆனால் நியூசிலாந்து நிறுவனத்திற்காக பணியாற்ற முடியாது. 92 நாட்களுக்கு மேல் பணியாற்றும் நபர்களிடம் வரி வசூலிக்கப்படும். நியூசிலாந்து சுற்றுலாவால் ஆண்டுக்கு 11 பில்லியன் டொலர் அளவுக்கு வருவாய் ஈட்டுகிறது.

அத்துடன் நியூசிலாந்து மக்களுக்கு 200,000 வேலை வாய்ப்பையும் உருவாக்கியுள்ளது. ஆனால் 2024 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் நியூசிலாந்தின் பொருளாதாரம் தொழில்நுட்ப ரீதியாக மந்தநிலைக்குள் நுழைந்தது என்றே கூறப்படுகிறது.

மேலும் சர்வதேச பார்வையாளர்கள் எண்ணிக்கை இன்னும் தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளை விடக் குறைவாக உள்ளதாகவே கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...